மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாவை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சரித்திர நாவல் நுால். நாயக்க மன்னர்களின் ஆட்சியை கண் முன் நிறுத்துகிறது. மங்கம்மாவின் வாழ்வை சுவைபட விவரிக்கிறது. ராணி என்ற அந்தஸ்திலான அரசியல் வாழ்க்கை, அதற்கு முந்தைய நிகழ்வுகள் கற்பனை கலந்து எழுதப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள், இழப்புகள் கதை போக்கில் விவரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அத்தியாயமும் கவரும் வண்ணம் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு உள்ளன. எளிமையான நடை ஓட்டம் தடங்கலின்றி வாசிக்கத் துாண்டுகிறது. போர் காட்சிகள் எல்லாம் நேரில் பார்ப்பது போல் வர்ணனையுடன் எழுதப்பட்டுள்ளன. ஆர்வத்தை துாண்டும் வரலாற்று நாவல்.
– ராம்