புதுக்குடியிருப்பு என்ற ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை கருவாக உடைய நாவல் நுால். ஊருக்கு அருகில் வாகன விபத்தில் சிக்கும் மருத்துவரை மக்கள் காப்பாற்றுகின்றனர். அதற்கு முதன்மை காரணமாக இருந்தவன் வேண்டுகோளை ஏற்று, மருத்துவர்அங்கேயே தங்கி மருத்துவ தொழில் செய்கிறார்.
அவரது சேவையைப் பழமைவாதிகள் எதிர்க்கின்றனர். இவ்வாறாகத் தொடரும் கதை முடிவில், மருத்துவர் சுயநினைவாக ஊரைவிட்டு செல்வது போல் உள்ளது. இலக்கிய நடையில் பெயர், உளவியல் நாவலை படைக்க முடியும் என எடுத்துக்காட்டியுள்ளது.
கிராம மக்கள் மனம் வெளிப்பட்டிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். நாவல் மையக் கருவாக உளவியலை ஒரு பாத்திரமாக்கி கதை நகர்கிறது. புதிய கோணத்தில் புனையப்பட்ட நாவல்.
– முகிலை ராசபாண்டியன்