நாட்டார் வழக்காற்றியல் வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பேராசிரியருக்கு உரிய அணுகுமுறையில் 14 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ளது.
களப்பணி வாயிலாக திரட்டப்படும் தகவல்களை கொண்டே ஆய்வை முன்னெடுத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கிறது. ஆய்வுகளில் உருவாகியுள்ள குழு மனப்பான்மை, ஜாதியப் பாகுபாடு போன்றவற்றை சுட்டிக்காட்டுகிறது.
அண்ணன்மார் கதை பற்றி விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. திரவுபதி வழிபாட்டிலும் பரந்த பண்பாட்டுக்கூறு அமைந்திருப்பதை எடுத்துக்காட்டியுள்ளது. கேரளத்தில் நாட்டார் வழக்காற்றியல் எவ்வாறு துறையாக வளர்கிறது என்பதை எடுத்துரைக்கிறது. நாட்டார் வழக்காற்றியலை விரும்புவோருக்கு பயன்படும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்