மேடைத் தமிழுக்கு மகுடம் சூட்டிய அவ்வை நடராசனின் சொற்பொழிவுகள் நுால் வடிவம் பெற்றுள்ளன. பேச்சு, எழுத்து நடை இடைவெளி மிக அதிகம். ஆனால், இதில் உள்ள இலக்கிய நடை, இரண்டையும் விட சிறந்து இருப்பதை விவரிக்கிறது.
பாரதி இலக்கிய விழா, தொல்காப்பிய விழா, வளர்தமிழ் விழா, வள்ளலார் காந்தி விழா, திருவள்ளுவர் விழா, கம்பன் விழா, புறநானுாறு விழா, வானொலி இலக்கிய விழாக்களில் பேசிய தமிழ் முழக்கம் இலக்கிய விருந்தாய் பரிமாறப்பட்டுள்ளது.
எதுகை, மோனை, உவமை, உற்சாகம், சிந்தனையுடன் கலந்து செந்தமிழ் நயவுரையாக மனதில் பதிய வைக்கிறது. மேடைப் பேச்சில் மெருகு ஏற்றிக்கொள்ள விரும்புவோருக்கு உதவும் பாடநுால்.
– முனைவர் மா.கி.ரமணன்