தன்னலமற்ற தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை மரபுக் கவிதையில் தரும் நுால். அவரின் உண்மைப் பேச்சு, சலியாத உழைப்பு, சுயநலமின்மை, மனித நேயம், தேசப்பற்று, தலைமைப் பண்புகள் என, 19 தலைப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.
விருதுநகர் கோவில் யானைக்கு மதம் பிடித்த போது கட்டுப்படுத்தி அடக்கினார். நாடு விடுதலை பெற்ற பிறகே திருமணம் என்று சுதந்திரப் போராட்டத்தை கையில் எடுத்து பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். போராட்டத்தில் சிறை பிடிக்கப்பட்டபோது சூட்கேஸ் நிறைய புத்தகங்களுடன் சென்றார் என்ற தகவல்களை தருகிறது.
தஞ்சை மருத்துவக் கல்லுாரி, நெய்வேலி நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, கிண்டி தொழிற்பேட்டை நிறுவியது பற்றி கூறுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்