திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால். வாழ்வின் நிதர்சனம் கூறப்பட்டுள்ளது. பணக்காரப் பெண்ணை விரும்பிய ஏழையை பணக்காரன் இல்லை என்பதால் ஒதுங்கினாள். மற்றொரு பணக்காரர் தன் சொத்துக்களுக்கு எல்லாம் ஏழையை அதிபதி ஆக்கினார். அந்தப் பெண் ஒரு பணக்காரனை திருமணம் செய்தாள். பணக்காரன் அவளை காதலித்தவனின் நெருங்கிய நண்பன்... இப்படி கதை போகிறது.
இடையில் அவள் பார்வை பறிபோகிறது. காதலித்தவன் கண்களால் இழந்த பார்வையை பெற்றாள் அவள் என்று நிறைவடைகிறது. நம்பிக்கை உள்ளவன் தாழ்ந்து போக மாட்டான். பழக்கத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்ற வருவது பிள்ளைகளே என்ற கருத்துகள் புத்தகம் முழுதும் இருக்கின்றன.
– சீத்தலைச் சாத்தன்