நாட்டு விடுதலைக்காக போராடியோர் பற்றி விளக்கும் நுால். பல மதத்தவரும் இணைந்து பாடுபட்டுள்ளதை பதிவு செய்துள்ளது. சிலரை உயர்த்திப் பேசுவதையும், சில தகவல்களை மறைத்ததையும் சுட்டிக் காட்டியுள்ளது.
பீஹார் மாநிலம் பாட்னாவில் தேசியக்கொடிக்காக உயிர் தியாகம் செய்த பள்ளி மாணவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் சுட்டு வீழ்த்தியும், இறுதி வரை கொடியை உயர்த்திய வீரம் பேசப்பட்டுள்ளது.
விடுதலைக்காக சுற்றுப் பயணத்தில் நிதி திரட்டிய மகேந்திர பிரதாப், 1915ம் ஆண்டிலே சுதந்திர அரசு அமைத்தது குறித்து கூறப்பட்டுள்ளது. சித்திரங்குடி மயிலப்பன் சேர்வைக்காரர், 1799ம் ஆண்டே ஆங்கிலேய படைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதும் பதிவாகியுள்ளது.
- முகில் குமரன்