குலதெய்வம் மற்றும் கிராம தேவதை வழிபாடுகள் பற்றிய நடைமுறைகளை பதிவு செய்திருக்கும் நுால். சாமானியருக்கும் புரியும் வகையில் எளிய நடையில் உள்ளது.
கிராமப்புறங்களில் வணங்கப்படும் இசக்கி அம்மன், பேச்சியம்மன், சுடலை மாடன், காலசாமி, கட்டையேறும் பெருமாள், முத்தாரம்மன் பற்றி தகவல்கள் தனித்து தரப்பட்டுள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள நடைமுறைகள், இது போன்ற வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வழிகாட்டும்.
வீடமைத்தல், விதையிடல், அறுவடை, காது குத்து, பூப்படைதல், திருமணம், ஈம சடங்குகளை குலதெய்வ வழிபாட்டுடன் இணைத்துச் செய்வது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு