தமிழ் இலக்கியப் படைப்புகள் பற்றி விமர்சன பார்வைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பிரபல எழுத்தாளர் அகிலன் படைப்புகள், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த கட்டுரைகளையும் உடையது.
அகிலன் படைப்புகளில் காந்திய தாக்கம், கதை பின்னல் வகைகள், தமிழ் வாசகர் வட்டத்தை உருவாக்கிய பங்களிப்பு, படைப்பு களங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமும், கயல்விழி நாவலும், ஞானபீட பரிசு பெற்ற போது நடந்த நிகழ்வுகள் என கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வுகள் குறித்து ஆக்கங்களும் இடம் பெற்றுள்ளன. அவரது பல்வேறு படைப்புகளை சீர்துாக்கி கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இலக்கியத்தில் விமர்சனப் பார்வையை உடைய கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ஒளி