ஒருவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்ப பலன், அவர்களுக்கு இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ கிடைத்துவிடும் என்பது மனிதர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள குடும்ப நாவல்.
அழகான குடும்பத்தில் பிறந்து, அன்பான பெற்றோரால் வளர்க்கப்பட்ட ராஜராஜேஸ்வரிக்கு மணமாகிறது. மணம் புரிந்த கணவன் சிறிது காலத்துக்குப் பின் மனைவிக்கு உண்மையாக நடந்து கொள்ளவில்லை. பெண் பாவம் சும்மா விடாது என்பது போல், தவறிழைத்த நாகராஜன் இந்தப் பிறவியிலேயே தண்டனை அனுபவிக்கிறான்.
இக்கதை எளிய நடையில், உலக நடப்புகளை சுட்டிக்காட்டி, பெண்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்பி, விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்