இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை என எழுதப்பட்ட நுால். பகவத் கீதைக்குத் தமிழில், கண்ணனின் முத்தம் என்று தான் தலைப்பு வைக்க வேண்டும் என்கிறார்.
இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் கற்பனை கதைகளையும், நிகழ்வுகளையும் விவரித்துள்ளார். தன்னலம் கருதாதது அன்பு. அதன் வெளிப்பாடு தான் உண்மையான வழிபாடு. அன்பு காலகாலத்திற்கும் நிரந்தரமானது.
உண்மையில் கீதையில், இயல்புக்கு ஏற்றாற்போல் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதை முதலில் செய்யுங்கள் என்று தான் கண்ணன் கெஞ்சி கேட்டுக் கொள்கிறான். இவ்வளவு அக்கறை கொண்ட கண்ணனை, காதல் தெய்வம் என்று அழைப்பதில் தவறில்லையே.
–- இளங்கோவன்