காதல் தோல்வி, கைவிட்ட கணவர், பெண் குழந்தையுடன் வாழ்க்கை போராட்டம் என, ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் நாவல்.
வேறு பெண்ணுடன் சென்ற கணவரால், குடும்பம் நடத்த முடியாத லீலாவின் குமுறல், சமூகத்தில் பல குடும்பங்களில் இருப்பதை நினைவூட்டுகிறது. குழந்தையுடன் ரயில் முன் பாய்வதா, உடலை விற்று பிழைப்பதா என மனம் ஊஞ்சல் ஆடுகிறது. முன்பு மணம் செய்ய விரும்பிய மாற்றுத்திறனாளியை, ரயிலில் எதிர்பாராமல் சந்திக்கிறாள்.
பெண்ணின் நிலை அறிந்து, மறுவாழ்வு கொடுக்க விரும்புகிறார் மாற்றுத்திறனாளி. அந்த நேரத்தில் திரும்பி வந்து கதவை தட்டுகிறார் கணவர். கணவரை ஏற்றாளா, மாற்றுத்திறனாளி நிலை என்ன போன்ற கேள்விக்கு விடை சொல்லும் நாவல்.
– டி.எஸ்.ராயன்