நீதி கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.
மகாபலி மன்னரிடம், தருமரை அழைத்துச் சென்ற கண்ணன், தர்மம் செய்வதை விட, மக்களை சிறப்பாக வாழ வைப்பதே கடமை என உணரச் செய்கிறார். வாலி, ராமரின் அம்பால் அடிபட்டதை, அறம் குறித்த பார்வையுடன் கூறுகிறது.
‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ ஒன்றே பெற்ற பொருளின் பயன் என்று, இளையான்குடி மாற நாயனார் நிகழ்ச்சி விளக்குகிறது. கணைக்கால் இரும்பொறையின் தன்மானம் கவிதை வரிகளில் எளிமையாக இடம்பெற்றுள்ளது.
முதலையும், குரங்கும் கதை, தீயோர் நட்பு கூடாது என்பதை விளக்குகிறது. ஐம்புலன்களை அடக்கி வாழ்வதே சிறப்பு என்பதை அடங்காமனம் கவிதை விளக்குகிறது. படிக்க இனிமையாக உள்ள நுால்.
– முனைவர் கலியன்சம்பத்து