அனுபவ பாடங்களில் முகிழ்த்த கவிதைகள், நீர் குமிழி போல் ஜாலம் காட்டுகின்றன.
எளிய தலைப்புகளில், 60 சிறு கவிதைகள் உள்ளன. தேடலை, ‘எல்லாமற்ற வெளியில் சத்சித்தானந்தம்’ என நெகிழ வைக்கிறது. குறைந்த சொற்களில், ‘நறுக்’ என அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.
வளர்ச்சியை கண்டு பிரமித்து ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. வரலாறு என்ற தலைப்பில், ‘புழக்கடையில் கல் உரல், அம்மி, குழவிகள் சாட்சி பூதங்களாய்’ என்கிறது.
அனுபவத்தை வெளிப்படுத்தும் எளிய கவிதைகளின் தொகுப்பு நுால்.