உணவுக்காக பசுக்களைக் கொன்ற பிரிட்டிஷ் படைக்கு, இந்தியாவில் ஏற்பட்டிருந்த எதிர்ப்புகளை பதிவு செய்யும் நுால்.
பசுவதையை எதிர்த்து பஞ்சாப், காஷ்மீர், மத்திய பிரதேசம், பீஹார் மாநிலங்களில் போராட்டங்கள் நிகழ்ந்தன.
அவை இஸ்லாமியருக்கு எதிரான போராட்டங்களாக ஆங்கிலேயரால் மாற்றப்பட்டது குறித்த விபரங்கள் எழுதப்பட்டுள்ளன.
ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு வெளியேறியதை பயன்படுத்தி, பசுவதைக்கு முழு தடையை கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் முழுக்க பதிவிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழ்ந்த பசு வதைகள் பற்றியும், அதை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் பற்றியுமான நுால்.
– புலவர் சு.மதியழகன்