காரைக்கால் வரலாற்றை விளக்கும் ஆவண நுால். உரிய ஆதாரங்களுடன் தகவல்களை தெளிவாக தருகிறது.
காரைக்கால் என்ற பெயர் காரணத்துடன் துவங்குகிறது. களப்பிரர், பல்லவர், சோழர், விஜயநகர ஆட்சி காலங்களின் நிலையை தெளிவாகத் தருகிறது. இலக்கியம், கல்வெட்டு ஆதாரங்களை குறிப்பிடுகிறது. இந்த பகுதியில் பவுத்த மதம் வலுவாக இருந்தது பற்றியும் கூறுகிறது.
தொடர்ந்து, அன்னியர் ஆட்சியின் போது இருந்த நிலையை சித்தரிக்கிறது. பிரஞ்சு ஆட்சி முறையையும் விவரிக்கிறது.
அன்னியருக்கு எதிராக, விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் குறித்த தகவல்களும் பதிவாகியுள்ளன. விடுதலை இயக்க செயல்பாடு மற்றும் வழிபாட்டு தலங்கள் பற்றியும் விரிவாக உள்ளது.
காரைக்கால் வரலாற்றை அறிய உதவும் நுால்.
– ஒளி