நல்லுறவை பேணும் கருத்தை முன் வைத்து உருவாக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். குழந்தைப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. மனித நேயம் வளர்க்க தன்னலமற்ற பார்வை வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தலைமுறையினருக்கும் நல்வழிகாட்டி சிந்தனையை விரிவுபடுத்தும்.
மற்றவர் வாழ்க்கையில் பெற்றதை எண்ணி பொறாமை கொள்வதை தவிர்த்து உழைத்தால் உயரம் கிட்டும் என்கிறது. உறவுகளின் பெருமை, அன்பு, உறவுகளால் ஏற்படும் வலிகள் என சமூக உறவு வரை எடுத்துரைக்கிறது. அரசின் திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப்பற்று, மொழிப்பற்று, வனப்பாதுகாப்பு, தண்ணீரின் தேவை, தியாகம், ஆசை என பல பொருள்கள் பற்றியும் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
– வி.விஷ்வா