வசன வடிவில் அமைந்துள்ள, 50 கவிதைகள் தொகுப்பு நுால். வாழ்க்கையை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது.
எளிய வார்த்தைகளில் சொல்ல வரும் கருத்து எளிமையாக வெளிப்பட்டுள்ளது. ‘தாலாட்டை துார ஓட்டு’ என்ற கவிதையில், இன்றைய குழந்தைகளுக்கு, தாலாட்டின் அருமையை உள்ள வேறுபட்ட நிலையை விவரிக்கிறது.
‘நிலா நிலா ஓடி வாரேன்’ என்ற கவிதையில், வாழும் பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு நிலாவிற்கு ஓடி வாரேன் என்று மானுடக் கூட்டம் கூறும் கருத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறது. அர்த்தம் மிக ஆழமானது.
வாசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும், செயல்படவும் துாண்டும் நுால்.
– வி.விஷ்வா