நாட்டிலும், வாழ்விலும் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டும் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். மூடநம்பிக்கைகளை காக்க பகுத்தறிவை கொல்வதாக குறிப்பிடுகிறது. ஒழுக்கம், கல்விக்கு உள்ள வேறுபாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
நாடாள, ‘டாஸ்மாக்’ அட்சய பாத்திரமாய் திகழ்கிறது என்கிறது. தெய்வத்திற்கும் முன்னால் நிற்கும் குருக்களின் துர்நடத்தைகளை கோபமாக வெளிப்படுத்துகிறது.
ஆசை தான் துன்பங்களுக்கும் அஸ்திவாரமிடுவதாக கூறுகிறது. வயிற்றுப் பசி, அறிவுப் பசி, உடற்பசி என்பதை பிரித்துக் காட்டுகிறது. பசி இருக்கும் வரை தேடல் தீர்ந்து விடாது; பசி தீர்ந்தவன் பசிப்பவனை நினைப்பதில்லை என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. மனிதனின் உள்ளுணர்வை துாண்டும் கவிதைகள்.
– வி.விஷ்வா