வாழ்வில் அன்றாட நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக மலரும் உணர்வுகளை திரட்டித் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். முதல் கதை, ‘மறியல்’ என்ற தலைப்பில் நிஜ காட்சிகளை ஓட விடுகிறது. மது பழக்கத்தால் மனம் மாறும், ‘குடிமகன்’ கதை காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு தருகிறது.
‘வாழ்வதில் உள்ளது வசந்தம்’ என்ற கதை, குழந்தையை வளர்த்து, பாசம் காட்ட முடியாமல் தவிப்பதை வெளிப்படுத்துகிறது. துாக்கு தண்டனை கைதியின் மன போராட்டம், ஒருதலைக் காதலின் வலி, மனைவி – கணவன் இடையில் ஏற்பட்ட சிறு சலசலப்பு பற்றி எல்லாம் கதைகள் உள்ளன.
பணியில் இருந்து ஓய்வு பெற்றவரின் மனநிலையை ஒரு கதை பிரதிபலிக்கிறது. கடந்து போன வாழ்வு தருணங்களை நினைவூட்டி சிந்திக்க துாண்டும் நுால்.
– விநா