விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட சமூக நாவல். உள்ளன்போடு தாய் மாமன் அரவிந்தனை காதலித்த அனன்யா, வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்தவள். சகோதரன் ஜெகனுக்காக காதலைத் துாக்கி எறிந்தாள். ஜெகன் நல்வாழ்வுக்கு உறுதி அளித்த பாஸ்கரின் பணத்தைக் கண்டு மணந்தாள். விதி அவளை ஏமாற்றியது.
பாஸ்கரோ, பிறன்மனை நோக்கி பேராண்மை இழந்தான். அதனால் படுகொலை செய்யப்பட்டான். நிர்கதியாய் நின்றாள் அனன்யா. பணம், வசதி, வாய்ப்பு, வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசம் செய்யும் நிகழ்வுகளும் இடையிடையே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அனன்யா வாழ்வு என்ன ஆனது. அவள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசியதா என்பதை சொல்லும் புதினம்.
– புலவர் சு.மதியழகன்