கல்லுாரி பருவத்தில் உண்டாகும் காதல், பாலியல் ஈர்ப்பாலோ, இன கவர்ச்சியாலோ ஏற்பட்டாலும் நெஞ்சை விட்டு நீங்காது என்பதை விவரிக்கும் நாவல்.
துாரத்து உறவுகளான தியாகுவும், அபிநவும்கல்லுாரி நண்பர்கள். தியாகுவின் தங்கை நிர்மலாவும், அபிநவும் விரும்பினர். அபிநவின் தங்கை காவ்யா, தியாகுவை விரும்பினாள். இவர்களின் திருமண ஏற்பாடுகளை பெற்றோர் முன்னெடுத்தனர்.
ஆனால், தியாகுவோ வேறொரு பெண்ணை விரும்புவதாகக் கூற, திருமணங்கள் தடைபட்டன. வீம்புக்கு அபிநவுக்கு செல்வந்தர் மகளை மணம் முடித்தனர். ஆதலால், நிர்மலாவுக்கு வேறொரு வரனை நிச்சயிக்கும் நிலை ஏற்பட்டது. இருவர் வாழ்வும் சுகப்பட்டதா என்பதை குடும்பச் சிக்கல்களோடு விவரிக்கும் புதினம்.
– புலவர் சு.மதியழகன்