சங்கீத வித்வானின் குடும்பத்தை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள நாவல்.
இசை பற்றிய ஆய்வுக்காக சென்றவர், அந்த குடும்ப விஷயங்களில் துணை நிற்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. வித்வானின் மூத்த பெண் வெளிப்படையான இயல்பு உடையவள். அவள் கணவனுக்கு சந்தேக புத்தி. இத்துடன் இரண்டாவது மகள் காதல் பிரச்னை என சூடுபிடிக்கிறது.
குடும்பங்களில் சின்ன பிரச்னைகள் பெரிதாவதையும், சிக்கல் ஏற்படுத்துவதையும் தெளிவுபடுத்துகிறது. காதல், கல்யாணம் எல்லாம் கட்டுப்பாட்டில் இல்லாதவை என்பதை உரைக்கிறது. கவனிக்கத்தக்க நாவல்.
– முகிலை ராசபாண்டியன்