சக்தி தெய்வ வழிபாட்டு முறையை விளக்கும் நுால். வழிபாட்டு மந்திரங்கள், திருவிழாக்கள் பற்றி தெளிவாகக் கூறுகிறது.
சக்தியை வழிபடும் சாக்த சமய தோற்றம், கோட்பாடு, பிரிவுகள், தந்திரங்கள் மற்றும் வழிபாடு முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
கோவில்களில் சக்தி சிலைகளின் அமைப்புகளும் விளக்கப்பட்டுள்ளன. கேரளத்தில் பின்பற்றப்படும் காளி வழிபாட்டு முறை மற்றும் நாடகங்களை விவரிக்கிறது.
பாவை நோன்பில் உள்ள சக்தி தெய்வத்தின் சிறப்பை அலசுகிறது. கொற்றவை வழிபாடு, கண்ணகி வழிபாடு தொடர்புகளை எடுத்துக் காட்டுகிறது. பக்தி இலக்கியங்களான பெரிய புராணம், அபிராமி அந்தாதியை ஆய்ந்து, சக்தி வழிபாட்டை முன்வைக்கிறது.
சக்தி தெய்வ ஆவணமாக விளங்கும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு