அவதார புருஷர்கள், மகான்கள், ஞானிகள அருளிய மெய்வாக்குகளை தொகுத்துத் தரும் நுால். அத்வைதம், துவைதத்தில் கூறப்பட்டுள்ள பிறவி பற்றிய செய்திகளும், வீடுபேறு பற்றி ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிறவா நிலை வேண்டி உடலை பிரபஞ்சத்தில் கரைத்தவர் வள்ளலார் என குறிப்பிடுகிறது. பக்தி, கர்மா பற்றி பகவத்கீதை அருளியதும் உள்ளது. ராமாபிரான் வரலாறு, கருட புராணம், ஸ்ரீமத் பாகவதம், மனுதர்ம சாஸ்திரம் போன்ற வேதங்கள் பிறவாமை பற்றி அருளிய கருத்துக்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
கர்ம வினைகளால் பிறவி என்னும் பெருங்கடலில் வீழ்ந்தவர்கள் அதைக் கடக்க இறையருள் எனும் மரக்கலத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும் என விளக்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்