திறந்த மனதுடன் இலக்கியத்தை அணுகி விமர்சித்து வந்த, அறிஞர் கோவை ஞானியின் வாழ்க்கை மற்றும் பணிகளை சுருக்கமாக தரும் நுால். ஏழு பகுதிகளாக விளக்குகிறது.
முதல் பகுதியில், கோவை ஞானியின் கல்வி, பணி மற்றும் குடும்ப வாழ்வை எளிமையாக தருகிறது. மாற்றுக்கருத்துக்களை மதித்த அவரது பண்பு தெளிவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது இலக்கிய ஈடுபாடுகள் குறித்து விளக்குகிறது. படைத்த இலக்கியங்கள் குறித்த செய்திகளையும் தருகிறது. ஈடுபாடான செயல்களை நெகிழ்வுடன் காட்டுகிறது.
பார்வைத்திறன் குன்றிய போதும், உதவியாளர் துணையுடன், வாசிப்பு, எழுத்து என இலக்கிய தீவிரம் பற்றி வியப்பூட்டும் தகவல்களை பகிர்கிறது.
படைப்பு, விமர்சனம், வாசிப்பு என இடையறாது செயல்பட்டவரின் வாழ்க்கை வரலாற்று நுால்.
– ஒளி