பத்திரிகையில் பல்வேறு காலக்கட்டத்தில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொறுப்பில்லாமல் சுற்றியவனுக்கு, வியாபார பொறுப்பை கொடுத்தவுடன் எப்படி மாற்றம் வருகிறது என சொல்கிறது ஒரு கதை. டைரி எழுதும் பழக்கம் உடைய கணவனிடம் கடன் கொடுத்தோம் என்று, அவர் மறைவுக்கு பின் ஏமாற்ற முயன்றவர்கள் பற்றியும் உள்ளது.
சொந்தக் காலில் நிற்க முடியாத மாப்பிள்ளை, சரிப்பட்டு வர மாட்டான் என்ற உண்மையை சொல்லும் கதை உள்ளது. பாறை மேல் விதையை துாவி என்ன பயன் என்ற பொன்மொழி பளிச்சென்று மின்னுகிறது. முத்தாய்ப்பாக முத்தாரம் என்ற மேடை நாடகம், அண்ணாதுரை எழுதிய நாவலை தழுவியுள்ளது. சோதனைகளை வென்று தியாகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்