நடிகர் வடிவேலு மொழிநடையில் சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அங்காங்கே வடிவேலுவின் முக பாவனைகளை காட்டுகிறது.
விடாமல் விரட்டும் கெட்ட ஆவியைக் காட்டும் திருவிளையாடலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் காரணத்தைக் காட்டும் கதையும் நகைச்சுவையாக நல்ல கருத்தை எடுத்துரைக்கின்றன. மனித நேயத்தைக் கற்பிக்காத கல்வியால் எந்தப் பயனும் இல்லை என்ற உண்மையை காட்டியுள்ளது.
பட்டிமன்றத்தை நம்பியிருக்கும் பேச்சாளர் படும்பாட்டை, பட்டிமன்றம் என்ற கதை சொல்கிறது. நுாலகத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளும் பட்டியல் இடப்பட்டுள்ளன. நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையை அவர் மொழியிலே வழங்கியுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்