பாரதியின் வாழ்வு நிகழ்வுகள் தனித்துவமிக்க அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்ந்துள்ள நுால். தொடராக, ‘காந்தி’ இதழில் வந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பாரதியின் பழக்க வழக்கங்கள், படைப்புகள் உருவான நிலை பதிவாகியுள்ளது.
புத்தகத்தில், 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பான்மை பாரதியின் புதுவை வாழ்க்கை, செயல்பாடுகள் குறித்து உள்ளன. சமூகத்தின் அடிநிலையில் வாழ்ந்தோருடன் கொண்டிருந்த உறவு சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. பொருத்தமான முன்னுரையுடன், எளிய நடை சுவாரசியம் தருகிறது.
மக்களுடன் பாரதி கொண்டிருந்த உறவின் மேன்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது. பாரதி வாழ்வின் முக்கிய காலக்கட்டத்தில் உடன் வாழ்ந்தவரின் அனுபவ பார்வையை பகிரும் நுால்.
– மலர்