கதையின் நாயகியர் நல்ல சிந்தனை உள்ளவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மணிமா என்ற பாத்திரத்தை நல்ல விதமாக படைத்துள்ளார். முத்துலட்சுமி என்று ஒரு கதை. கிராமத்துப் பெண் படிப்பில் படுசுட்டி; வசதியான குடும்பம். அவள் மறுத்தும், 15 வயதிலே திருமணம் செய்து வைக்கின்றனர் பெற்றோர். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. உறவினர்கள் கேலி செய்கின்றனர். இந்த நிலையில் கணவன் விபத்தில் உயிரிழக்க, துக்கிரி என்ற பட்டமும் சேருகிறது.
விதவையான ஏக்கத்தில் அம்மாவும் போய் சேர, அப்பா மனநோயாளி ஆகிறார். முத்துலட்சுமி அப்பாவையும் காப்பாற்றி துணிவுடன் படிக்கிறாள். பெண்மையை போற்றும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்