ராமேஸ்வரம், ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளை உடைய சேது நாடு பற்றிய குறிப்புகளை தரும் நுால். சேது என்றால் அணை என்ற பொருளை காட்டுகிறது.
ராமனால் பூஜித்து வணங்கப்பட்ட சேது பந்தனம் துவங்கி, இலங்கை என்ற தலைப்போடு, 12 கட்டுரைகளை உடையது. கடல் பகுதியில் அமைந்த மணல் திட்டு, ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது. கங்கை நதியில் மூழ்கினால் மட்டும் பாவம் போகும். ஆனால், சேது நாட்டைக் கண்டாலே பாவம் தொலைந்து விடும் என்கிறது.
ராமேஸ்வரம் – தலைமன்னார் தரைவழி போக்குவரத்து இருந்ததாகச் சொல்கிறது. தனுஷ்கோடியில் நீராடினால், காசி யாத்திரை நிறைவு அடைவதையும் தருகிறது. தனுஷ்கோடி புயல் சீற்றத்தின் விளைவை கண்முன் நிறுத்துகிறது.
சேது நாட்டின் பெருமை, வரலாற்றை கூறும் நுால்.
– பேராசிரியர் ரா.நாராயணன்