சமூக வரலாற்று ஆய்வறிஞர் கோ.கேசவன் வாழ்க்கை மற்றும் பணிகளை சுருக்கமாக அறிமுகம் செய்யும் நுால். இலக்கியச் சிற்பிகள் வரிசையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் எட்டு பகுதிகளை உடையது. முதலில் அறிஞரின் பணிகள் முன்னோட்டமாக உரைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, பழந்தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்த பரப்பு, அணுகுமுறையை உரைக்கிறது.
இருபதாம் நுாற்றாண்டு படைப்புகளை நோக்கி சமூக வரலாற்றை முன்னெடுத்தது குறித்த விபரங்கள் உள்ளன. நாவல், கவிதை, சிறுகதைகள் சமுதாயத்தை பதிவு செய்த வரையறையை தெரிவிக்கிறது. புரட்சிக்காக பாடிய பாரதியார், சமூக இயக்கங்கள், தலித்தியம், மார்க்சியம் குறித்த அவரது கண்ணோட்டமும் பதிவாகியுள்ளது. தமிழ் சமூக வரலாற்றில் தீவிரமாக பங்காற்றிய அறிஞரை அறிய உதவும் நுால்.
– மதி