வாழ்வில் செல்வம் இல்லாததால் பலருக்கும், இருப்பதால் சிலருக்கும் பிரச்னை என்ற கருத்தை அடிநாதமாக உடைய நாவல். ஜமீன்தாரின் ஒரே மகன் கார் விபத்தில் சிக்கினான். நடைபாதையில் பொருள் விற்றுக் கொண்டிருந்த ஜீவானந்தம் என்ற வியாபாரி அவனை காப்பாற்றுகிறான்.
அதற்கு நன்றிக் கடனாக, அந்த குடும்பத்தை மாளிகையில் தங்க வைக்கிறார் ஜமீன்தார். அப்போது, ஜமீன்தாரை வளைத்துப் போட முயற்சி நடக்கிறது. ஜமீன்தார் குடும்பத்தைச் சிதைக்க, பில்லி சூனியம் வைத்ததாக கதை நகர்கிறது.
ஒருவரின் குணநலன்களை உறுதி செய்யாமல் பொறுப்பு தரக்கூடாது; கைமாறு என்றாலும் கணக்கு இருக்கணும்; செல்வத்தை விட சுய கட்டுப்பாடும், ஒழுக்கமும் அவசியம் போன்ற அறிவுறுத்தலை வழங்கும் கதை.
– சையத் அலி