சிந்தனைகளை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கடவுளின் கால்குலேஷன் என துவங்கி, 65 கதைகளை உடையது.
ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு எண்ணத்தையும், சிந்தனையையும் வெளிப்படுத்துகின்றன. தரப்பட்டு உள்ள முடிவுகள் படிப்பை தரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா கதைகளும் ஒரே பாணியில் அமையவில்லை. வித்தியாசமான கோணங்களில் நகைச்சுவை, அறிவுரை, முன்னோர் பின்பற்றிய நெறிமுறை, கற்று உணர்ந்த அனுபவங்கள் என பல்சுவையுடன் தருகிறது; ஆழ்ந்த அனுபவத்தையும் போதிக்கிறது.
உச்சி வெயில் என்றும் பாராமல், உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான், சோற்றில் கை வைக்க முடியும் என்பதை உணர்த்துகிறது. சுவாரசியமான சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– வி.விஷ்வா