ஆங்கிலேயர் வரும் முன்பே அரேபியாவுடன் இந்திய வணிகத் தொடர்பை சான்றாதாரங்களுடன் விளக்கும் நுால். மலபார் புரட்சியை சொல்கிறது.
அரேபிய ஆண் – கேரள பெண் கலந்து உருவான இன மக்கள், நிலப்பிரபுகள் ஆங்கிலேயருடன் சேர்ந்து செய்த கொடுமைகளை எதிர்த்து போராடியதை குறிப்பிடுகிறது. நாளடைவில் விடுதலை போராட்டமாக மாறியதை கூறுகிறது. இதை மறைத்து, ஹிந்து- இஸ்லாமிய போராட்டம் என திரிக்கும் முயற்சியை கண்டிக்கிறது.
மலப்புரம் பள்ளி வாசலுக்காக உயிர் நீத்தோர் பட்டியலும், கூட்ஸ் ரயில் பெட்டி கொடுமையில் இறந்தோர் பட்டியலும் இடம் பெற்றுள்ளன. மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட விடுதலை போராட்டத்தை அறியும் அரிய ஆவணமாக விளங்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்