முகப்பு » கதைகள் » இந்துமதி கல்யாணம்

இந்துமதி கல்யாணம் எப்போ?

விலைரூ.140

ஆசிரியர் : கமலா முரளி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுருக்கமாக படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 15 சிறுகதைகள் உள்ளன. ஒன்று மட்டும் நெடுங்கதை. பெரும்பாலும் பெண்ணியம் பற்றி பேசுகின்றன. ஆண்களின் மனக்குறைகளை சொல்லும் கதைகளும் உள்ளன.

வாழ்வியல் கருத்துகளை அனுபவ ரசத்துடன் சாறு பிழிந்து கொடுத்தது போல் உள்ளது. காலை உணவு உண்ணாமல் அலுவலகம் செல்பவர் பற்றியும் உள்ளது. அது போன்ற ஒருவரின் மனதில் நுழைந்து சிறுகதையாக மாற்றப்பட்டுள்ளது.

‘ஆணும் அழலாம்’ என்ற சிறுகதை, உள்மன ஊடுருவலால் நிகழ்ந்துள்ளது. ‘கல் நெஞ்ச மனிதர்கள்’ என்ற கதை, குருவிகளை கவண் வில்லால் அடித்து கொல்லுவோரை காட்சிப்படுத்தியுள்ளது. எண்ணத்தை எழுத்தில் இணைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.

வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us