ஹைக்கூ கவிதையின் மற்றொரு வடிவமாக ‘மோனைக்கூ’ கவிதை தொகுப்பு. ஒவ்வொன்றும் மூன்று வரிகள் உடையது.
‘செதுக்கிய சிலைகள் சிறப்பாக பேசப்பட்டன; சிற்பியோ வறுமையில்...’ என்பது போல, உழைப்பின்அருமையை புரிய வைக்கிறது. ‘தேர்வு முடிந்தது தேவையில்லை என்றானது தேனான புத்தகங்கள்’ மற்றும் ‘பரீட்சைக்கு படித்து முடித்தவன் பதற்றத்தில் மறந்து போனான் பழக்கப்பட்ட பேனா!’ போன்ற கவிதைகள், மாணவர்களின் மனநிலையை பேசுகின்றன.
வீட்டுக்கொரு மரம் வளர்க்க வேண்டும் என, விண்ணில் இருந்து பறவைகள் குரல் கொடுப்பதை சத்தமாக சொல்கிறது. மயானத்தை செழிப்பாக்கியதாக, மரம் வளர்ப்பதை பற்றி கூறுகிறது. கவிதைகளை வேறு வடிவில் கூறும் நுால்.
– டி.எஸ்.ராயன்