இடம், காலத்துக்கு தக்கவாறு வாழ்க்கை முறை மாறியிருந்தாலும், நடைமுறைகள் ஒன்றாயிருப்பதை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள நுால். வாழ்வின் நோக்கம் பொதுத்தன்மை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் மற்றும் பயனுள்ள குறிப்புகள் தொகுத்து தரப்பட்டுள்ளன. பெருந்தலைவர்கள் வெளியிட்ட கருத்துகள், ஞானிகளின் போதனைகளில் இருந்து தேவையான மொழிகள், சுருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளது. மாற்றத்தை உருவாக்கும் விதை போல் பதிவாகி உள்ளது.
அறிவே இறைவன் என்ற ஞானி வேதாத்திரி மகரிஷி குறிப்பிட்ட, ‘உணர்ந்தால் தெளிவு: உணராவிட்டால் மயக்கம்’ போன்ற பொன்மொழிகள் ஏராளம் உள்ளன. படித்து கடைப்பிடிக்க ஏற்ற வகையில் அமைந்த நுால்.
– திசை