இந்தியாவில் நாகரிகம், அறவியல், மதம், கலைகளின் ஊற்று தமிழகமே என உரைக்கும் நுால். இந்நுால் ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
இந்த நுால், ஆரியர் வருகைக்கு முன் இந்தியாவில் வேதங்கள் என்ற தலைப்பில் துவங்குகிறது. தொடர்ந்து, மேற்குலக நாடுகளில் இந்தோ – ஆரிய மொழியின் பரவல், ஐரோப்பியரின் முன்னோர் இந்தியரே என, பல தலைப்புகளில் கருத்துக்களை முன் வைக்கிறது.
பல்வேறு நுால்களில் உள்ள கருத்துக்கள் திரட்டி தரப்பட்டுள்ளன. அவை, 20 தலைப்புகளில் உள்ளன. எழுத பயன்பட்ட புத்தகங்களின் பட்டியல் தனி இயலாக தரப்பட்டுள்ளது. தமிழகத்தின் தொன்மை நாகரிகத்தை ஆராய்ந்து கருத்து சொல்லும் நுால்.
– ராம்