தமிழ் பண்பாட்டை அடையாளப் படுத்தும் சிறுகதைகள் என்ற முத்தாய்ப்புடன் மலர்ந்துள்ள நுால். பிரபல படைப்பாளர்களின், 34 கதைகள் கால அடிப்படையில் தரப்பட்டுள்ளன. வசிக்கும் மனதை பண்படுத்தும் வகையில் உள்ளன. நுட்பங்களை வெளிப்படுத்தியுள்ளன.
இவற்றில், ‘முள்முடி’ என்றொரு சிறுகதை. பிரபல எழுத்தாளர் ஜனகிராமன், 1958ல் எழுதியது. பள்ளி ஆசிரிய பணியில் இருந்து ஓய்வு பெற்றவரின் ஞான நிலையை வெளிப்படுத்துகிறது.
ஓய்வு பெற்ற நாளும் அதற்கு மறுநாளும் கதைக்கள நிகழ்வு. நெருக்கடி தான் மனித மனம் பண்பட்டு, பரிணாமம் பெறுவதை உறுதி செய்கிறது என வெளிப்படுத்துகிறது.
எந்த நிலையிலும் மனித மனம் கிளை பிரிந்து நுட்பமாக இயங்குவதை இயல்பாக சித்தரிக்கும் படைப்புகளை உடைய தொகுப்பு நுால்.
– மலர்