பக்குவப்பட்ட வயதில் வரும் காதல், பரிபூரணமானது என்பதை மையக் கருவாக உடைய நாவல் நுால். பார்த்த, கேட்ட பாத்திரங்களை நினைவுபடுத்தும் வகையில் எளிய நடையில், இயல்பான வார்த்தைகளுடன் உள்ளது.
தமிழ்ப் பாடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவிக்கு, ஒரு மாணவனின் அறிமுகம் கிடைக்கிறது. நட்பாய் துவங்கிய பழக்கம், காதலாய் மாறுகிறது. சில நாட்களில் பெண்ணின் வீட்டில் வரன் தேடும் படலம் துவங்க, அதை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டு பணிக்கு செல்கிறாள்.
காதல் என்ன ஆனது என்பது தான், இந்த கதையின் மையக்கரு. கதை நெடுகிலும் சங்க இலக்கியப் பாடல் கருத்து விரவிக் கிடக்கிறது. காதல் என்றால் காத்திருப்பு, நம்பிக்கை, முன்னேற்றம் என பிரதிபலிக்கும் நாவல்.
– சையது