இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு வகை பாதுகாப்பு என்ற பேருண்மையை உணர்த்தும் நாவல்.
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞனும், பெண்ணும் ஒரே வீட்டில், ‘லிவிங் டு கெதர்’ முறையில் வாழ்ந்து வருகின்றனர். அப்போது சொந்த ஊர் செல்லும் இளைஞனுக்கு, வசதியும் அழகும் மிக்க பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. அதோடு ஒன்றாக வாழ்ந்த பெண் தொடர்பை விடுகிறான்.
தொடர்ந்து ஊட்டியில் ஆசிரியையாக பணியாற்றும் அந்த பெண்ணுக்கு, மனைவியை இழந்தவர் அறிமுகம் கிடைக்கிறது. அது திருமணத்தில் முடிகிறது.திருமண உறவுக்குள் வராமல் இணைந்து வாழ்வது ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதை கதாபாத்திரங்கள் வாயிலாக விவரிக்கும் நுால்.
– பெருந்துறையான்