பிரபல எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராமின் படைப்பாக்க சிறப்புகளை விளக்கும் நுால். இந்திய இலக்கிய சிற்பிகளை கவுரவப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை குறிப்பும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.
வாழ்க்கை நிகழ்வுகளுடன் துவங்குகிறது. தொடர்ந்து, படைத்த கதைகளை வகை பிரித்து, அவற்றின் உயிரூட்டத்தை ஆய்வு செய்து சிறப்புகளை வெளிப்படுத்துகிறது. நாவல்களில் உள்ள சிந்தனை வேறுபாட்டையும் நுட்பமாக பேசுகிறது.
குறுநாவல்கள், கவிதை, நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் குறித்து தனித்தனி தலைப்புகளில் கருத்துக்களை தந்துள்ளது. படைப்பின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து விமர்சனப்பூர்வமாக எழுதப்பட்டுள்ள படைப்பு திறனை வெளியிடும் நுால்.
– திசை