வசதி படைத்த தம்பதியின் மகள், பள்ளி பரதநாட்டிய அரங்கேற்றத்தின் வாயிலாக திரைத்துறைக்குள் நுழைகிறாள். பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கிறாள். ஆரம்பத்தில் இருந்த ஆர்வம், போகப் போகக் குறைய, சாதாரண வாழ்க்கை வாழ விரும்புகிறாள். பணம், புகழுடன் செழிப்பவளை, சுற்றி உள்ளவர்களின் செயல் அதற்கு வழிவிடவில்லை.
இந்நிலையில், நடிகருடன் காதல் ஏற்படுகிறது. அவள் கர்ப்பமாகிறாள். முன்னணி ஹீரோவாக உருவெடுத்த அவன், அவளை கைவிட்டு நகர்கிறான். அவளுக்கு உதவியாய் இருந்த உதவி இயக்குனர், சொத்துக்களை பறித்து, நடுத்தெருவில் விட்டுவிடுகிறான்.
விரக்தி அடைந்தவள், அமெரிக்கா செல்கிறாள். பின், அவளது வாழ்வில் என்ன நடந்தது என்பதை விறுவிறுப்பாக சொல்கிறது. நிஜக்கதையை பிரதிபலிக்கும் நாவல்.
– மேதகன்-