பள்ளி பெண் நிர்வாகிக்கும், ஒரு ஆசிரியருக்கும் இடையே நடைபெறும் ஒரு மவுனப் போராட்டத்தை மையமாகக் கொண்ட நாவல்.
பெண் நிர்வாகி மனதில் இடம் பிடிக்க ஆசிரியர் செய்யும் முயற்சிகளும், பழைய காதலியின் நினைவுடன் நிர்வாகியை அணுக முயற்சி செய்வதும், அதைத் தவிர்க்க முடியாமல் அந்த பெண் நிர்வாகி, மனிதாபிமானத்திற்கும், பெண்ணுக்கே உரிய பண்பாட்டிற்கும் இடையே மனப் போராட்டம் நடத்துவதும் த்ரில்லாக உள்ளது.
மனிதாபிமானம் மற்றும் காதலின் இனிமையையும், தமிழ்ப் பெண்களின் குணத்தையும், பண்பாட்டையும் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.
மொத்தத்தில் மனிதாபிமான, பண்பாட்டு பெட்டகமாக இது திகழ்கிறது.
– இளங்கோவன்