பெண்களின் வாழ்வியலை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உடலால், மனதால், அறிவால் சந்திக்கும் அனுபவங்களை மனதில் ஏந்தி உரக்கச் சொல்கிறது.
நீண்ட துார உறவுகளில் இருக்கும், தொலைவிலான உரையாடலின் முக்கியத்துவத்தை பகிர்கிறது. ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என, கலப்பு மணம் புரிந்த தம்பதியருக்கு ஆறுதல் சொல்கிறது.
மனிதர் வாழ வேண்டிய எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டால், எங்கிருந்து காற்று வரும் என, ‘சீமந்தம்’ கதை உணர்த்துகிறது. சாதி, மதம் கடந்து மனிதர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திற்கு வர பாடம் கற்பிக்கிறது.
மனைவியின் உணர்வு அறிந்து செயல்பட்ட கணவரின் செயலை, ‘வேகத்தடை’ கதை பாராட்ட வைக்கிறது. மனித மனங்களை பேசும் நுால்.
– டி.எஸ்.ராயன்