மஹாராஷ்டிராவில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய அம்பேத்கர், வெளிநாடுகளில் படித்து கல்வியால் முன்னேறி உலக அளவில் புகழ்பெற்ற கதையை கூறும் நுால்.
முழங்காலுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது; உணவகத்திற்கு வரக்கூடாது; பள்ளியில் படிக்கக் கூடாது; பொதுக்குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது போன்ற கொடுமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற விபரங்கள் எளிய நடையில் உள்ளன.
பரோடா சமஸ்தானத்தில் பணியாற்றிய போது, அலுவலகத்தில் வைத்திருந்த குடத்தில் தண்ணீர் குடிக்க உரிமை இல்லை; உணவகங்கள் உணவு வழங்காமல் ஒதுக்கின. தங்க யாரும் இடம் தரவில்லை. அலுவலகத்தில் கடைநிலை ஊழியராலும் புறக்கணிக்கப்பட்டதையும் குறிப்பிடுகிறது. படத்துடன் எளிய மொழி நடையில் அமைந்துள்ள நுால்.
– விநா