தமிழ்க்கடவுள் என்று சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில், முருகப்பெருமானின் பிறப்பு குறித்து எழுதியுள்ள விதம் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.
அமோகன் என்னும் மந்திரியைப் பற்றியும், சூரபத்மனுக்கு அறிவுரை கூறியது பற்றியும் சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. அது எல்லாருக்கும் படிப்பினையாகும். எக்குலத்தாருக்கும் பொருந்தும் அறிவுரையை கையாண்டிருப்பது பாராட்டுதலுக்குரியது.
தேவர்- – அசுரர் போர், சேனைத் தலைவர் வீரபாகுவின் வீரச் செயல்கள், அமைச்சர் தருமகோபன் சூரபத்மனுக்கு சொன்ன ஆறுதல் என பலதரப்பட்ட தகவல்களுடன் கதை நகர்கிறது. பூஜை அறைகளில் தவழ வேண்டிய புத்தகம்.
– தி.செல்லப்பா