தமிழறிஞர் சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து தொகுத்து, இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தரும் நுால்.
பிறப்பிடம், கல்வித் தேர்ச்சி, மொழியறிவு, பணி விபரங்கள், ஆய்வுத் திறமை, எழுத்தாற்றல், இலக்கண அறிவு, இதழ் பணிகள், படைப்பாற்றல் போன்ற விபரங்கள் நிரல்படத் தரப்பட்டுள்ளன.
இடர்ப்பாடுகளுக்கு இடையில் முனைப்போடு தொடர்ந்த இலக்கியப் பயணத்தை விவரிக்கிறது. அவர் எழுதிய நுால் விபரம் பட்டியல் இடப்பட்டுள்ளது. படைப்புகளில் உள்ள நுட்பமான பார்வை தனித்தனியே குறிப்புரைகளாக தரப்பட்டுள்ளன.
ஆய்வு சிந்தனை மிக்க அறிஞர் பற்றி அறிந்து கொள்ள உதவும் அருமையான நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு