கொன்றைவேந்தன் வரிகளை அடி யொற்றி உருவாக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
எட்டு தலைப்புகளில், 91 அடிப்பாக்கள் உள்ளன. ஒரு பக்க அளவில், விளக்கப்பா தரப்பட்டுள்ளது. முதல் அடியான ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பதற்கு, ‘உன்னை வெல்வது யார்’ என்ற தலைப்பில் தந்தையின் உயர் வினை மற்றும் போற்ற வேண்டிய இன்றியமையாத தேவையான குணங்களை எளிமையாக உணர்த்துகிறது. இதுபோல் ஒவ்வொரு அடிப்பாக்களுக்கு அளித்துள்ள விளக்கங்கள் முழுமையாக அமைந்துஉள்ளன. அவ்வையின் நற்கருத்துக்கள் பலருக்கும் சேரும் வண்ணம் அமைந்த விளக்க கவிதை நுால்.
-– வி.விஷ்வா